வடக்கில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது-கோத்தபாய

ட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொருஇனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது.

யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் இந்த நிலைமை

குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இன நல்லிணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். ஏனைய இனத்தவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை தொடரும் வரையில் பிரிவினைவாதத்தை ஒழிக்க முடியாது.

பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருகின்றனர். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :