காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள முஸ்லிம் முதியோரில்ல வீதியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை வெடிக்காத நிலையில் 15 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள வாய்க்காலைத் துப்பரவு செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த போதே குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெடிக்காத நிலையில் இருந்த இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மிகவும் பழுதடைந்த நிலையில் இக்குண்டு உள்ளதாக தெரிவிக்கும் காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment