15 வயது பாடசாலை மாணவியின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


னக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்ததாக் கூறப்படும் உடதும்புர பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பின் பிரகாரம் மாணவியின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வீட்டில் வைத்து இந்த மாணவி தனது உடலுக்கு தீ மூட்டிக்கொண்டு உயிரிழந்ததாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த மரணம் தொடர்பில் சாட்சியாளர்கள் வழங்கிய வாக்குமூலங்களைக் கருத்திற்கொண்ட நீதவான் பகிரங்க தீர்ப்பு வழங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து உடதும்பர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக விசாரணையின் பொருட்டு கொழும்பு சட்டவைத்திய நிபுணரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :