சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 149 தொலைபேசிகளும் 184 வாசனைத்திரவியங்களும் பறிமுதல்

ட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 149

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 184 வாசனைத் திரவியங்கள் அடங்கிய போத்தல்கள் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

டுபாயிலிருந்து UL-532 என்ற விமானத்தில் வந்த ஒருவரினால் இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தீர்வை வரி நிவாரணமொன்று வழங்கப்படுவது வழமை என்பதால் அவர்களின் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சுங்க அதிகாரிகளை திசை திருப்பும் முகமாக இவ்வாறு டுபாயிலிருந்து பொதி செய்து சார்ஜாவிலிருந்து வரும் பயணி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த 18 ஆம் திகதி சுங்க பிரிவு கைப்பற்றிய வெள்ளி ஆபரணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பரிசோதனை அறிக்கையில் அதன் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாவென உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :