சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமான 13ம் திருத்தத்தை பாதுகாக்கும் களத்தில் ஹக்கீம், வாசுதேவ.



லங்கை அரசு 13வது சட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளைத் திருத்த முயற்சிப்பது குறித்த பிரேரணைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒருவார கால அவகாசம் கேட்டிருப்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறினார்.

ஆளும் கூட்டணியின் கட்சிகளின் கூட்டம் இது குறித்து கலந்தாலோசிக்க செவ்வாயன்று கூட்டப்பட்டபோது, தான் நாட்டில் இல்லை, ஆனால் இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருப்பதாகத் தெரிந்த பின்னர், தனது பாலத்தீனப் பயணத்தை ரத்து செய்து இலங்கை விரைந்ததாகத் தெரிவித்தார் ரவுப் ஹக்கீம்.

இந்த பிரேரணைகளை பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமாக இருப்பதாக தாங்கள் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டபோது தனது கட்சிக்கு இது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய அவகாசம் வேண்டுமென்று தானும், அமைச்சர் வாசுதேவ நானயக்காரவும் கேட்டுக்கொண்ட்தற்கிணங்க ஒரு வார கால அவகாசம் தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்த்தாக ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசு சார்பில் இரு மாகாணங்கள் விரும்பினால் அதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கும், மாகாண சபைகளுக்கு சட்டவாக்கல் குறித்த அதிகாரங்களைத் தரும் 154 ஜி என்ற பிரிவின் கீழ் தரப்பட்ட அதிகாரங்களில் பெரும்பான்மை மாகாணங்கள் விரும்பினால், அதிகாரங்களை ரத்து செய்வதற்கும் பிரேரணைகள் முன்வைக்கபட்ட்தாக ரவுப் ஹக்கிம் உறுதிப்படுத்தினார்.

13வது சட்டத்திருத்தத்தின் சில நன்மையான அம்சங்களை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான ஒரு வழியாகவே இதை தாங்கள் பார்க்கிறோம் என்றார் ரவுப் ஹக்கீம்.

இந்த முயற்சியை அரசு திணிக்க முயன்றால், அதை சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கும் என்றார் ஹக்கீம்.

(பீபீசி) 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :