சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சருடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
பிரதேச முஸ்லிம் மக்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகவும், அதன் பின்னரே ஜனாதிபதியை தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment