2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது இடம் பெயர்ந்த மக்களுக்கு முன்னால் தேசிய வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களின் முயற்சியின் பிரகாரம் அமெரிக்கா வர்த்தகரான ராஜ ரஜாரட்ணம் அவர்களின் முதலீட்டின் மூலம் 174 வீட்டு அலகுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த 174 வீட்டு அலகுகளும் 48 மாடி வீட்டு அலகுகளாக அமையப் பொற்றிருந்தது.
இந்த பாரிய வீட்டுத் தொகுதியின் கழிவினை அகற்றுவதற்காக (Treatment Plant) திரிட்மன் பிளானட் எனும் இயந்திரமும் அமையப் பெற்றிருந்தது. இந்த இயந்திரத்தினை இயக்குவதில் ஏற்பட்டிருந்த குழர்படியினால் கடந்த 2 ½ வருடங்களாக இந்த இயந்திரம் இயங்காமல் மலசலகூட கழவுகள் கான் (Drainage) வழியாக ஓட்டம் எடுத்ததினால் அயலில் உள்ள மக்கள் வாழ முடியாமல் போய் உள்ளது.
இந்த மக்களும் அயலில் உள்ள மக்களும் பல தடவைகள் கல்முனை மாநகர முதல்வர், கல்முனை பிரதேச செயலாளர், கூட்டாதன சபையின் தலைவர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
அயலவர்களினால் குற்றவியல் நடை முறைச் சட்டக் கோவையின் 98ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையினை அகற்றுவதற்கான விண்ணப்பத்தின் மீது பொதுச் சுகாதாரப் பரிசோதகரை மன்று மாடி வீட்டுக் குடியிருப்பாளர்களிடம் இருந்து பணம் அறவீடு செய்து கழிவினை அகற்றுமாறு B/4617/12 வழக்கில் 06.05.2013ம் திகதியன்று கட்டளையாக்கிருந்தது.
குடியிருப்பாளர்கள் சார்பில் 09.05.2013ம் ஆண்டு சட்டத்தரணி மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மூலம் நீதிமன்றில் நகர்வு மனு அணைக்கப்பட்டு இந்த இயந்திரத்தினை பராமரிக்க வேண்டிய பொறுப்பு மக்களின் மக்களினால் வெளியாக்கப்படும் கழிவுகளினை அகற்ற வேண்டிய கடமை உள்ளுராட்சி சபைக்கு உரியது என்ற தத்துவத்தின் அடிப்படையில் மாநகர சபையே பராமரிக்க வேண்டும் எனவும் குறித்த வீட்டுத் தொகுதிகள் அமையப் பெற்றிருக்கும் நிலம் இன்னமும் பிரதேச செயலாளரின் தற்றுனிவின் கீழ் இருப்பதினால் பிரதேச செயலாளரும் பொறுப்பு கூற வேண்டும் என விளக்கியிருந்தார்.
கல்முனை கனம் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் அவர்கள் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களின் விளக்கத்தினை ஏற்று 10.05.2013ம் திகதியன்று குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து நிலவரத்தினை கண்டரிய வேண்டும் எனவும் 13.05.2013ம் திகதியன்று கல்முனை மாநகர சபை முதல்வர் அவர்களுக்கும் பிரதேச செயலாளரும் நீதிமன்றில் பிரசண்ணமாயிருக்குமாறு கட்டளையாக்கியிருந்தார்.
மக்கள் தமது பிணக்குகளை நீதிமன்றுக்கு கொண்டு வந்து தமக்கு நிவாரணம் பெற முயற்சித்த சட்டத்தரணி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனுக்கு நன்றி கூறினர்.

0 comments :
Post a Comment