சாய்ந்தமருது இளைஞர்களுக்கிடையே தலைவர்களை உருவாக்கி சிறந்த தலைவர்களை நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டுதலில் இளைஞர் விவகார அமைச்சர் டெலஸ் அலகப்பெரும அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்கு சாய்ந்தமருது பிரிவில் றிஸான் தெரிவு செய்யப்பட்ட செய்தியினை அறிந்து தான் மிகவும் மகிழ்வடைந்தேன்.
பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையம் தெரிவித்தார்.
குறிப்பாக இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற இளைஞர்கள் மிகச் சிறந்த தலைமைத்துவ பண்புகளையும் தேசிய ரீதியில் பல்வேறு இளைஞர்களுடன் பழகுவதுடன் ஏனைய சமுகங்கள் தொடர்பான நல் அபிப்பிராயத்தையும் பெறமுடிவதாக தெரிவித்த பிரதியமைச்சர் தங்களுடைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதோடு இந்த நாடு இன முறுகள் அற்ற சகல இனங்களுக்கும் சொந்தமான நாடு என்ற கோட்பாட்டின் கீழ் நாட்டைக் கொண்டு செல்வதற்காகவே இவ் இளைஞர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதியமைச்சர் தொடர்ந்தும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடுகையில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட றிஸான் அவர்கள் சகல இளைஞர்களையம் ஒன்று சேர்த்து சில நேரங்களில் இவ் வாக்களிப்பில் எதிராக செயற்படும் இளைஞர்களையும் ஒன்றுபடுத்தி அனைவருக்கும் தலைமை தாங்குவதுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்காக பாடுபடுமாறும் மேலும் அம்பரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சகல இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவர்களுக்கு எதிர்காலத்தில் தனது அமைச்சின் முலம் செய்ய முடிகின்ற சகல உதவிகளையும் செய்வதாக பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment