பினான்ஸ் கம்பணி உத்தியோகத்தர்களை கொள்ளையர்கள் என்று தாக்கிய கும்பல்.


நிதி நிறுவனமொன்றுக்கு மாதாந்த தவணைக் கட்டணத்தை (பினான்ஸ்)  செலுத்தத் தவறிய முச்சக்கர வண்டியொன்றின் உரிமையாளரை மடக்கி அவரிடமிருந்து பினான்ஸ் கம்பனி அதிகாரிகள் வண்டியை எடுத்துச் சென்றனர்.
இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த இளைஞர் கோஷ்டியொன்று வாகனத்தை கொள்ளையர்கள்தான் அபகரித்துச் செல்கின்றார்கள் என நினைத்து மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்தனர்.

அதிகாரிகளை கடுமையாக தாக்கிய இளைஞர் குழு அவர்களிடமிருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் அபகரித்துக்கொண்டு மாயமாய் மறைந்து விட்டனர்.

இச்சம்பவம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவாசி என்னுமிடத்தில் இடம்பெற்றது.

தாக்குதலுக்குள்ளான பொ. சீனிவாசன் என்ற பினான்ஸ் கம்பனி அதிகாரி கடுமையான காயங்களுடன் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும், சந்தேக நபர்களையும் தேடி முந்தல் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :