அரசியலுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவது நல்லதல்ல-AHR

முன்னாள் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர் அஸாத் சாலி கைதுசெய்யப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இது ஓர் ஆபத்தான நிலைமை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்படும் ஒருவருக்கு அரசியல் அமைப்பிற்கு அமைய அதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். இது தனிமனித சுதந்திரத்திற்கும் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கும் முரணான ஒரு விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாட்டின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்
குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :