மஞ்சள் கடவை கடக்கும் போது கார் மோதி ஒரே குடும்பத்தில் மூவர் பலி- படங்கள்.


வெள்ளவத்தை விகாரை லேனை அண்மித்து காலி வீதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு (05.04.13) வௌ்ளவத்தை காலி வீதியில் மஞ்சள் கோட்டினால் வீதியினை கடக்க முயன்ற மூவரை கார் மோதியமையினால் இவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய பாலசூரியன் வாரணி என்ற பெண் உயிரிழந்தார். 16 வயதுடைய ஜீவன் ஜனனி, 13 வயதுடைய ஜீவன் ஜனன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் யுவதியின் நிலை கவலைக்கிடமாகி அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருவர் இறந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூன்றாவது நபரான 13 வயதுடைய ஜீவன் ஜனன் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர்களது உடல்கள் சுவிஸ் நாட்டுக்கு எடுத்துச்செல்லபடவுள்ளது.  தற்போது கல்கிசை மகிந்த மலர்சாலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.TCNN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :