
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் தாய் ஒருவர் தனது பிள்ளைகள் மூவரை கிணற்றில் வீசி எறிந்ததில் குறித்த மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (17ம் திகதி) காலை 8.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளைகள் கிணற்றில் வீசி எறியப்பட்டதை கண்டு அயலவர்கள் உடன் விரைந்து தாயை பிடித்துள்ளனர்.
தாய் தற்போது வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாய் ஒரு மனநோயாளி எனவும் மனநோய்க்கு அவர் மருந்து அருந்தி வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பிள்ளைகளுக்கு நான்கு, மூன்று மற்றும் ஒன்றரை வயதாகிறது. பிள்ளைகளின் சடலங்கள் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.
வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment