கொழும்பு காலிமுகத்திடலில் நாளை (18ம் திகதி) இடம்பெறவுள்ள யுத்தவெற்றி கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி இன்று (17ம் திகதி) காலை 5 மணி தொடக்கம் யுத்த வெற்றி கொண்டாட்டம் முடியும்வரை இந்த விசேட போக்குவரத்து ஒழுங்கு அமுல்படுத்தப்படுகிறது.
காலி வீதி ஊடாக கொழும்பில் இருந்து புறப்படும் வாகனங்கள் ஒல்கோட் மாவத்தை,டெக்னிகல் சந்தி, மருதானை பாலம் சந்தி, டி.பி.ஜயா மாவத்தை, இப்பன்வல சந்தி,தர்மபால மாவத்த, தாமரை தடாக சுற்றுவட்டம், சுதந்திர மாவத்த, ரீட் மாவத்த,தும்முல்ல சுற்றுவட்டம், பௌதாலோக மாவத்த, ஆர்.ஏ.டி.மெல் மாவத்த, டுப்லிகேசன் டிக்மன் சந்தி வழியாக காலி வீதியை அடையலாம்.
காலி வீதி ஊடாக கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் காலி வீதியின் பக்கத்தலே சந்தியில் வலது பக்கமாக திரும்பி பௌத்தாலோக்க மாவத்த,ஆர்.டி.மெல் மாவத்தயில் இடது பக்கம் திரும்பி தும்முல்ல சுற்றுவட்டம், தேர்ஸ்டன் வீதி,க்ளாஸ்ஹவுஸ் சந்தி, தாமரை தடாக சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி, சீமன்ஸ் சந்தியில் வலது பக்கமாக திரும்பி மருதானை பாலம் சந்திக்குச் சென்று பெஸ்தியன் மாவத்த ஊடாக சீனோர் மாவத்தை ஊடாக கொழும்பை அடைய முடியும்.
0 comments :
Post a Comment