தம்புள்ளையில் அகற்றப்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று இடம் கோரி ஆர்பாட்டம்.


ம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்படவுள்ள வீடுகளின் உரிமையாளர்களினால் இன்று நஷ்டஈடு, மாற்று இடங்களைக் கோரி ஆரப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 100 பேர் இனாமளுவே விகாரைக்கு அதிலிருந்து பேரணியாக தம்புள்ளை நகர அபிவிருத்தி சபையின் காரியாலயத்துக்கு சென்று நஷ்ட ஈடும் மாற்று இடங்களும் கோரி முறைப்பாடு செய்தனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சூழவுள்ள 52 வீடுகளுக்கும் 17 கடைத்தொகுதிகளுக்கும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைத்திருந்தது . அக்கடிதத்தில் குறிப்பிட்ட வீடுகளும் கடைத் தொகுதிகளும் உள்ள காணி புனித நகர் அபிவிருத்திக்கு தேவைப்படுவதாகவும் 2012.10.31 ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை நகர அபிவிருத்தி சபையிடம் ஒப்படைக்கும் படியும் காணிகளுக்கு மாற்றீடாக கந்தலம பாதை, பொல்வத்தை எனுமிடத்தில் காணிகள் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் பொல்வத்தையில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 18 வீடுகள் அதிகார சபையினால் கையேற்கப்பட்டன. அவர்களுக்கு இதுவரை நஷ்டஈடோ காணியோ வழங்கப்படவில்லை . இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் எச்.ஏ.தயாநந்த கருத்து தெரிவிக்கையில் கையேற்கப்படும் காணி உரிமையாளர்களுக்கு பொல்வத்தையில் காணி வழங்கப்படுமே தவிர நட்ட ஈடு வழங்கப்படாது என தெரிவித்தார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :