.jpg)
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள் ளனர்.
இராணுவத்தலைமையகத்தில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கோட்டே மத்தியம்பலத்திலுள்ள சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியினால் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இராணுவத்தலைமைய கத்திற்குள் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment