அரசியல் களம் நேரடி ஒலிபரப்பு இம்போட் வானொலியியில் முபாறக் மெளலவியுடன்.

முன்னாள் உலமாக்கட்சியின் தலைவரும், புதிய கட்சியான முஸ்லிம் மக்கள் கட்சியியின் ஸ்தாபகருமான முபாறக் அப்துல் மஜீட் அவர்களுடனான அரசியல் களம் இம்போட் வனொலியில் இவ்வாரம் நேரடி ஒலிபரப்பாக இடம்பெற இருக்கிறது.

முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதும் முஸ்லிம்களுக்கு அநீதிகள் மற்றும் ஒவ்வொரு அசம்பாவிதங்கள் நடக்கின்ற நேரங்களிலும் தைரியமாகக் குரல் கொடுத்துக்கொண்டும், கண்டனம் தெரிவித்துக்கொண்டும் இருக்கும் முபாறக் மெளலவி அவர்கள் நேரடியாகக் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வாக இது அமைய இருக்கிறது நீங்களும் அழைத்து உங்கள் கேள்விகளையும் கேட்கலாம்  கேள்விகள்கேட்பதற்கு, Skype ID-  minaaj.jafuras or  import.radio1 இதுக்கு அழைத்து உங்கள் கேள்விகளைத்தொடுக்க முடியும்.

19.05.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை நேரம் 8.30 மணிக்கு இடம்பெற இருக்கும் இந்நிகழ்வு 11 மணிவரை இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முபாறக் அப்துல் மஜீட் மெளலவி அவர்கள் முன்னாள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :