அக்கரைப்பற்றில் பாமசி உரிமையாளர் ஒருவர் தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை முயற்சி.

க்கரைப்பற்று பிரதேசத்தில் பாமசி ஒன்றின் உரிமையாளரும் தாதியர் உத்தியோகத்தருமாக கடமையாற்றிவருபவர் தனது பாமசியில் தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்  கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

சாகாம வீதியில் உள்ள குறித்த பாமசியின் உரிமையாளர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆண் தாதியராக கடமையாற்றிவருகின்ற 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சம்பவதினமான சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் பாமசியை பூட்டிவிட்டு அதனுள் தற்கொலை செய்வதற்காக தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீயிட்டுள்ளார்.

இதணையடுத்து கடையினுள் தீப்பற்றி எரிவதை அயலவர்கள் கண்டு பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து பொலிசார் கடையை உடைத்து தீ பற்றி எரிந்த நிலையில் தீயிணை அனைத்து படுகாயமடைந்த அவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அவசர வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை கடையினுள் எரிந்துகொண்ட தீயிணை பொலிசார் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

இவரது மனைவியாரும் தாதி உத்தியோகத்தராக கடமையாற்றிவருகின்றார் என்பதுடன் கடன் பிரச்சணையினால் தான் தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :