கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களிடையே காணப்பட்ட முறுகல் சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களிடையே காணப்பட்ட முறுகல் சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அண்மையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நிசாம் காரியப்பர் உட்பட ஆறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தினை பகிஷ்கரிப்பு செய்தனர்.
இந்த சர்ச்சை தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே ஸ்ரீலங்கா முஸ்லின் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி தலைவரினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு குறித்த பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திற்கு கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரை அழைப்பது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதி மேயர் நிசாம் காரியப்பர் உட்பட கல்முனை மாநகர சபையின் 11 ஆளும் கட்சி உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டத்தில் மேயர் சிராஸ் மீராசாஹிப் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலியுடன் நடந்து கொண்ட விதத்தினையடுத்தே ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே முறுகல் ஏற்பட்டது.
இதேவேளை, பிரச்சினைகள் எதுவும் காணப்பட்டால் கட்சி தலைமைக்கு அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து ஊடகங்களுக்கு அறிக்கைவிடக்கூடாது என கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த கூட்டத்தில் தெரிவித்ததாக கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.TM

.jpg)
0 comments :
Post a Comment