
கடந்த சனிக்கிழமை லுணுகலை ப
/ அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்திற்கும் ,ப/பாத்திமா முஸ்லிம் மகளிர்
கல்லூரிக்கும் இடையிலான பதின்மூன்று வயதிற்கு கீழ் ,மற்றும் பதினைந்து வயதிற்கு
கீழ் மாணவிகளுக்கான வலைபந்தாட்ட போட்டியொன்று லுணுகலை ஜும்மாபள்ளி மைதானத்தில்
நடைபெற்றது.
நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ப / பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி
வெற்றியீட்டியது, பதின்மூன்று வயதின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் ஏழுக்கு பூச்சியம்
(7/0), என்றவகையிலும் . பதினைந்து வயதின் கீழ் நடைபெற்ற போட்டிகளில்
ஆறுக்கு மூன்று (6/3) என்ற வகையிலும் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரி வெற்றியீட்டியது.
நடுவர் பூவா தலையா போட்டு பார்த்து போட்டிகளை ஆரம்பித்து வைப்பத்தையும் மும்முரமாக
போட்டிகளில் ஈடுபடும் மாணவிகளையும் படங்களில் காணலாம்.






0 comments :
Post a Comment