அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நிசாம் நேற்று (17.05.2013) வெள்ளிக்கிழமை திடீர் விஜயம் ஒன்றைச் செய்தார்.
இவ் விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் குழுவினரை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதன்போது பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் சம்மந்தமாக எம்.ரீ.எம் நிசாம் பாடசாலை அதிபர் மற்றும் உதவி அதிபர் ஆகியோரிடம் கேட்டறிந்த பின்னர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளுடன் பாடசாலை தொடர்பான கல்வி நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை மாகாண பணிப்பாளர் பாடசாலை கல்வி தொடர்பான பதிவேடுகள், மாணவர்களின் பதிவேடுகள் மற்றும் அவை தொடர்பான பதிவேடுகள் எல்லாம் பரிசீலனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment