சர்ச்சைக்குரிய ஓரினத் திருமணத்தினை அங்கீகரிக்கும் சட்டமூலத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொய்ஸ் ஹொலண்டே கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம் ஓரினத் திருமணத்தினை அங்கீகரிக்கும் ஒன்பதாவது ஐரோப்பிய நாடாகவும், சர்வதேச ரீதியில் 14 வது நாடாகவும் பிரான்ஸ் இணைந்துகொண்டுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சியான வலதுசாரி கட்சி தாக்கல் செய்த மேன்முறையீட்டை அரசியலமைப்புப் பேரவை நேற்றைய தினம் நிராகரித்திருந்தது.
இது குடியரசு சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டிய தருணம் என்பதனால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி பிரான்கொய்ஸ் ஹொலண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டமூலம் கைச்சாத்திடப்பட்டு 10 நாட்களில் முதலாவது ஓரினத் திருமணம் நடைபெறலாம் என பிரான்ஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

0 comments :
Post a Comment