இந்தியாவின் முதல் பெண் இராணுவ வீராங்கனை சாந்தி டிக்கா தற்கொலை.

ந்தியாவின் முதல் பெண் ராணுவ வீராங்கனை சாந்தி டிக்கா. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைக்குரியைச் சேர்ந்தவர். இவரது கணவர் ரெயில்வேயில் பணிபுரிந்து இறந்தார். வாரிசு அடிப்படையில் சாந்தி டிக்காவுக்கு ரெயில்வேயில் வேலை கிடைத்தது. அதன் பிறகு மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்திய ராணுவனத்தின் பெண்கள் படைப்பிரிவு தொடங்கிய போது அதில் சாந்தி டிக்கா சேர்ந்தார். கடுமையாக பயிற்சி பெற்று முதல் பெண் வீராங்கனையாக தேர்வு பெற்றார். அவருக்கு ஜல்பைகுரி 969 ரெயில்வே என்ஜினீயர் படைப்பிரிவில் பாயிண்ட் மேன் பணி வழங்கப்பட்டு இருந்தது. சல்சா ரெயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 9-ந்தேதி சாந்தி டிக்கா பணி முடிந்து வீடு திரும்பிய போது மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றது. தியோபானி கிராமத்தில் அவரை ரெயில்வே கம்பத்தில் கட்டி வைத்துச் சென்று விட்டனர். கிராம மக்கள் அவரை மீட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாலும், உடல் சோர்வாக இருந்ததாலும் அருகில் உள்ள அலிபுர்தூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை மகன் அருகில் இருந்து கவனித்து வந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை சாந்தி டிக்கா கழிவறைக்கு சென்றார். அங்கு அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கழிவறை சென்றவர் நீண்ட நேரமாகியும் வராததால் மகன் சத்தம் போட்டார். பதில் இல்லாததால் கதவை உடைத்து சென்றார். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். முன்னதாக சாந்தி டிக்கா மீட்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு பையும் அதில் சில பேப்பர்கள் இருந்தன. இதை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சாந்தி டிக்கா சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கடத்தப்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.TCNN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :