போலி ஆவணங்களைத் தயாரித்த மூவர் கண்டி, தித்தவெல மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டைகள், திருமண அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை சந்தேகநபர்கள் போலியாகத் தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடைய போலி இரப்பர் முத்திரைகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, போலி சான்றிதழ்களைத் தயாரித்து தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் போலி ஆவணங்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆட்பதிவு திணைக்களத்திடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அவர் பலருக்கு தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.N1st
0 comments :
Post a Comment