ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் தீக்குளித்த பெளத்த தேரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகவியலாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விஷேட குழுவொன்று கண்டிக்குச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளது.

முன்னதாக ஞாயிறன்று கொழும்பில் இடம்பெற்ற மரண விசாரணைகளின்போது தனியார் பத்திரிகையொன்றின் புகைப்பட பிடிப்பாளர் ஒருவரிடம் மரண விசாரணை அதிகாரியினால் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தீக்குளிப்பு சம்பவத்தின் போது ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்பிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை செய்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சும் விசாரணைக்கென இரு குழுக்களை நியமித்துள்ளதாக அவ்வமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடக அமைச்சின் செயலாளர் சரிந்த ஹேரத், குறித்த தீக்குளிப்பு சம்பவத்தை முழுமையாக வீடியோ எடுத்தமையானது ஊடக ஒழுக்க விதிகளுக்கு முரணானது என வர்ணித்திருந்தார்.
எனினும், போவத்தே ரத்ன தேரர் தானாக தீக்குளிக்குத் கொண்டாரா? அல்லது எவரேனும் தீ வைத்தனரா? என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தேரரின் தீக்குளிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள வீடியோவொன்றில் குறித்த தேரர் மீது ஒருவர் தீ வைப்பது போன்ற ஒரு காட்சி பதிவாகியுள்ளது. இந்நிலையிலேயே குறித்த தேரருக்கு எவரேனும் தீ வைத்தனரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தனவை தொடர்புகொண்டு கேட்டபோது,
சம்பவத்தின்போது குறித்த இடத்தில் இருந்த பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர் பலரிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment