இன்னும் ஆறு நாட்களில் சவூதி அரேபியாவில் வழங்கப்பட்ட மன்னிப்புக்காலம் முடியவடையும்.


வூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பொது மன்னிப்புக் காலம் முடிவடைய இன்னும் 06 நாட்களேயுள்ளன. எனவே அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்போரை உடனடியாக நாடு திரும்பி வர இலங் கையில் உள்ள உறவினர்கள் வலியுறு த்த வேண்டுமென இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார கேட் டுக் கொண்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் சவூதி யில் தங்கியிருப்போர் வழங்கப்பட்டு ள்ள பொதுமன்னிப்புக் காலத்திற்குள் நாடு திரும்பாத விடத்து அந்நாட்டு அரசாங்கத்தினால் சுமார் 34 தொடக்கம் 35 இலட்சம் ரூபாய்கள் வரை தண்டப் பணம் விதிக்கப்பட்டு இரண்டு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படுவர். அவர்களுக்கு மீண்டும் சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கும் நிரந்தர தடை விதிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த அவசர கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உம்ரா செல்வதாகக் கூறி அங்கே தொழில் புரிவோர் உட்பட சுமார் 6 ஆயிரம் இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் தங்கியுள்ளனர். இவர்களின் நலன் கருதி இலங்கை அரசாங்கம் சவூதி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியதையிட்டே இலங்கையர்களுக்காக இவ்விசேட பொதுமன்னிப்புக் காலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் இது வரையில் சுமார் 400 பேர் வரையில் மாத்திரமே நாடு திரும்பியுள்ளனர். ஏனைய 5 ஆயிரத்து 600 பேரும் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளனர். இவர்களை உடனடியாக ஜெத்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை உம்ரா செல்வதாகக் கூறி சட்டவிரோதமாக தொழில்புரிந்து வருவோர் தாம் தொழில் செய்யும் நிறுவனம் அல்லது எஜமானரின் விடுப்பின் பேரில் அவரது சேவையை தொடரக் கோரி கடிதம் பெற்றுக் கொடுத்தால், அவர்களுக்கு அங்கே தொடர்ந்தும் பணி புரிவதற்காக சட்டபூர்வமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுக்கப்படும் என்பதனால் எதிர்வரும் 03 ஆம் திகதிக்கு முன்னதாக இலங்கை தூதரகத்துடன் தொடர்பினை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் பணியகத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.-தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :