காத்தான்குடியில் மையவாடியில் நகர சபை கட்டிடமொன்றை அமைக்க முற்பட்டமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடி ஜாமிஉல் லாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி காணியில் நகர சபையினால் கட்டிடமொன்று அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி இருந்தன.
இந்நிலையில் இன்று இரவு எட்டு மணியளவில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நிர்மாண பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பொதுமக்கள் அகற்ற முற்பட்டபோது குறித்த பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக குறித்த மையவாடி காணியில் கட்டிடம் அமைக்க குறித்த பள்ளிவாசல் நிர்வாக சபை அனுமதி வழங்கியிருக்கவில்லை. எவ்வாறாயினும் நகர சபையின் குறித்த நடவடிக்கையை அறிந்து கொண்ட பள்ளிவாசல் நிர்வாக சபை 'உங்களுடைய மையவாடி காணியை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள் ' என பள்ளிவாசலில் அறிவித்தது. இதனை அடுத்தே இன்று எட்டுமணியளவில் நிறமான பணிகளை ஆரம்பிக்க நகர சபை முற்பட்ட பொது பதற்றம் உருவானது.

0 comments :
Post a Comment