காத்தான்குடியில் பதற்றம் பொலிசாருக்கும் கல் வீச்சு- படங்கள் இணைப்பு.



ட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாகதெரிவித்து இன்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் மையவாடியில் பதற்றம் ஏற்பட்டது.

பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததோடு மட்டுமன்றி மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும்,இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும்,கலகம் தடுக்கும் படையினரும்,போக்குவரத்து பொலிசாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றம் நடந்த நேரத்தில் பொது மக்களை பொலிசார், சிவில் உடை அணிந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் தகரங்கள் ,வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :