கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸாத் சாலியின் மருமகன் ஆதிப் ராஜா சகோதர இணையத்திற்கு தகவல் தருகையில்,
ஆஸாத் சாலியின் மனைவி, மகள், மருமகன் ஆகிய எனக்கும் ஆஸாத் சாலியை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடலாமென எங்களது சட்டத்தரணி கூறினார்.
இதையடுத்து நாங்கள் அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை சென்றோம். எனினும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்றார்.
இதேவேளை ஆஸாத் சாலி தொடர்ந்து சாப்பிட மறுப்பதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது குடும்பம் கவலையில் மூழ்கியுள்ளதாகவும் ஆஸாத் சாலியின் மருமகன்
இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment