இந்நிகழ்வில் ஹாஷிம் உமர் பவுண்டேஷன் தலைவர் ஹாஷிம் உமர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி அவர்களின் சாதனைகளை பாராட்டினார். விழாவை அக்காடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் அஸ்மா முஸ்தாக் தலைமையேற்றார்.
விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியையும் பிரதம அதிதி ஹாஷிம் உமர் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கல்விசார் முன்னேற்றங்களை வாழ்த்திப் பாராட்டினார். இந்நிகழ்வில் ஏற்பாட்டாளர் டாக்டர் அஸ்மா முஸ்தாக் அவர்களும், புரவலர் ஹாஷிம் உமர் அவர்களது பாரியாரும் அருகில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
கல்வி துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இவ்விழா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்பினால் சிறப்பாகக் கூடி இருந்தது.









0 comments :
Post a Comment