மதவாச்சியில் பெண்ணொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த பெண்ணின் சடலம் மதவாச்சி பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் சில தினங்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment