கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
இவர் கொழும்பு தேசிய வைத்திய சாலை வார்ட் இலக்கம் 55 B யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அசாத் சாலி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இன்று மாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது உறவினர்கள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளனர். தாங்கள் கொண்டு சென்ற உணவையும், காவற்துறையினரால் வழங்கப்பட்ட உணவையும் அவர் ஏற்க மறுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அசாத் சாலிக்கு ஏற்கனவே நிரிழிவு நோய் இருக்கின்ற நிலையிலேயே உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment