ஆசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : ரிஷாத பதியுதீன்


யங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருகின்ற கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வெளிநாட்டில் இருந்து அரசை வலியுறுத்தியுள்ளார்.


முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் நெருக்கடிகளையும் மேற்கொண்டு நாட்டின் அசாதாராண நிலைக்கு குந்தகம் விளைவித்துள்ள பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்பினர் எவரையும் இதுவரை கைது செய்யாமல் அவர்களது இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வந்த ஒருவரை கைது செய்திருப்பதானது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயலாகும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை அசாத் சாலி கைது செய்யப்பட்டதை அடுத்து சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான ரவி கருணாநாயக்கா, டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினா உள்ளிட்ட அரசியல்வாதிகள் ஆஸாத் சாலியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியமை தொடர்பாகவும் முஸ்லிம் சமூக தலைவர்களுள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாத்திரம் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமக்கு ஆறுதல் கூறினார் எனவும் இதுவரை வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றும் சாலியின் புதல்வி தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :