கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார், நகைச்சுவை நடிகர் பக்ரு.

ஜீவா நடித்த டிஷ்யூம், விஜய் நடித்த காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு போன்ற படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் பக்ரு.

மிகவும் உயரம் குறைவான நடிகர். தமிழை விட, மலையாளத்தில் மிகவும் பரபரப்பான நகைச்சுவை நடிகராக உள்ளார்.

இவர் தற்போது, மலையாளத்தில் ‘குட்டியும் கோலும்’ என்ற படத்தை, இயக்கியதன் மூலம் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

உலகிலேயே மிகவும் உயரம் குறைவாக உள்ள ஒருவர் இயக்கியதற்காகத்தான் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு படத்தை இயக்குவதென்பது மிகவும் கடினமான வேலை எப்படி படத்தை எடுத்து முடித்தீகள்..? என்று கேட்டால், சிரமமான வேலைதான் என்றாலும் மனசுக்குப் பிடித்ததை செய்யும் போது எந்த விதமான கவலை, சோர்வு எதுவும் தெரியாது.

இன்னும் வேலை செய்... செய் என்று ஊக்கம் அதிகமாகுமே தவிர குறையாது என்கிறார் இந்த கின்னஸ் இயக்குனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :