கிறிக்கெட்டின் ஈழத்து மனோஜ் பிரபாகராக கலக்கும் நிந்தவூர் நிக்ஸி அஹமட்!


(அஹமத்)

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கிறிக்கெற் வீரர் நிக்ஸி அஹமட் அகில இலங்கை ரீதியாக இடம்பெற்று வருகின்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதலாம் பிரிவு கிறிக்கெற் சுற்றுப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி வருகின்றார்.

 ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், ஆரம்ப பந்து வீச்சாளராகவும் நிக்ஸி விளையாடுகின்றார். துடுப்பாட்டத்தில் 14 போட்டிகளில் கலந்து கொண்டு 737 ஓட்டங்களைப் பெற்று உள்ளார்.

 இதில் 94 பவுண்டரிகளும், 40 சிக்ஸர்களும் அடங்கும். பந்து வீச்சில் 24 விக்கட்டுக்களைக் கைப்பற்றி உள்ளார்.

 நாட்டின் மிகச் சிறந்த பாடசாலைகளுக்கு எதிராக கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு அதிகூடிய சிக்ஸர்களையும் அடித்து உள்ளார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரைச் சேர்ந்த நிக்ஸி அஹமட் கொழும்பு பிரதேசத்தில் இவ்வாறு அதீத திறமைகளை வெளிக்காட்டுகின்றமை முழுக்கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு பெருமை தரும் விடயம்.

 இந்திய முன்னாள் கிறிக்கெற் வீரரான மனோஜ் பிரபாகர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், ஆரம்ப பந்து வீச்சாளராகவும் விளையாடி நட்சத்திர வீரராக வலம் வந்தமையை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :