அமைச்சர் ஹக்கீமை முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் போட்டுக்கொடுத்தார்களா..?


பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலாளருடன் மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தான் தெரிவித்த கூற்றுக்களை திரிவுபடுத்தி ஒரு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளமை தொடர்பில் தான் கவலையடைந்துள்ளதாக மு.கா. தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

இக் கலந்துரையாடலில் பங்கேற்ற ஓரிரு முஸ்லிம் எம்.பிக்களின் கீழ்த்தரமான சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் இவ்வாறான செயல் குறித்து தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் சம்பந்தன் ஐயாவின் உரையின் போதும் இவர்களே குறுக்கீடுகளைச் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடுகள் குறித்தும், அது தொடர்பான ஏனைய விடயங்கள் பற்றியுமே நான் அங்கு பிரஸ்தாபித்தேன். அத்தோடு, பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்புக்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மேற்குலக நாடுகள் அதனை வேறுவிதமாகவே நோக்குவதாகவும் சுட்டிக் காட்டினேன் என்றும் அமைச்சர் கூறினார்.

இதனை ஜனாதிபதியிடம் திரிவுபடுத்தி இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை இது தொடர்பாக ஜனாதிபதியுடன் புதன்கிழமை காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்மை நிலையை எடுத்துரைத்ததாகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பாக விரைவில் தான் பேச எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :