சிறுபான்மையினர் தமது சமயத்தை பின்பற்றும் பூரண உரிமை உடையவர்கள்-பொன்சேகா



நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தமது சமயத்தை பின்பற்றும் பூரண உரிமை உடையவர்கள் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்று கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பொன்சேகா தெரிவித்ததாவது ,


பொது பல சேனா ஹலால் விவகாரத்திலிருந்து விலகிக்கொண்டமை தவறானது என தான் கருத்து தெரிவித்ததாக சில சிங்கள, தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. எனினும் அவ்வாறு எந்த கருத்தினையும் நான் சொல்லவில்லை. ஏனெனில் சிறுபான்மையினர் உள்ளிட்ட எவரும் தமது சமயத்தை பூரணமாக பின்பற்ற சுதந்திரமான சூழல் இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.


நாம் இஸ்லாம் சமயம் தொடர்பிலோ அல்லது முஸ்லிம்கள் தொடர்பிலோ ஒரு போதும் நாம் தவறான கருத்துக்களை வெளியிடவில்லை அத்துடன் அவர்களை நிந்திக்கும் வகையிலும் எத்தகையதொரு கருத்தினையும் நாம் வெளியிடவுமில்லை.


பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தற்காக பொது பல சேனா ஹலால் விடயத்தை கைவிட்டிருந்தால் பாதுகாப்பு செயலாளருக்காகவே அந்த அமைப்பு குறித்த ஹலால் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்துள்ளது என்பது தெளிவாகிறது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :