கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தினால் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.


(எஸ்.அஷ்ரப்கான்)

ல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற  கல்முனை
கே.பி.எல். ரீ-20 பிரீமியர் லீக்-2013 கடினபந்து கிரிக்கெட்
சுற்றுப்போட்டியின் 4வது கால் இறுதிப்போட்டி கல்முனை டொப் றேங், ஜிம்கானா
 விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு
மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய  டொப் றேங் விளையாட்டுக் கழகம் முதலில்
துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 102
ஓட்டங்களைப்பெற்றது.

பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய ஜிம்கானா விளையாட்டுக்கழகம் 17.4
பந்துகளில் 103 ஓட்டங்களைப்பெற்று 4 விக்கெட்டுக்களால்
வெற்றியீட்டிக்கொண்டது.

இந்தபோட்டியின் ஆட்ட நாயகனாக ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தின் இஸட்.
நியாஸ் தெரிவானார்.

மத்தியஸ்தர்களாக ஏ.எல்.எம். றியாஸ், எம்.யஹ்யா அரபாத் ஆகியோர் கடமையாற்றினர்.

இந்தபோட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட
கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் எம். கபூல் ஆசாத்
கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :