நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வியட்நாம் பயணம்.

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், வியட்நாம் நீதியமைச்சர் ஹா ஹூங் குங்க்கின் அழைப்பை ஏற்று, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அந் நாட்டிற்கு வெள்ளிக்கிழமை (19) இரவு பயணமாகின்றார்.

இம் மாதம் 24 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் அமைச்சர் ஹக்கீம் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கையினதும், வியட்நாம் இனதும் நீதியமைச்சர்கள் கடல்சார் சட்டம், சட்டம் மற்றும் நீதித்துறைச் சீர்திருத்தம், நடுத்தீர்ப்பு மையம், ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றம் என்பவற்றை உள்ளடக்கியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் நிகழ்வு குறிப்பிடத்தக்கதாகும். ற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீதி, சட்டத்துறை மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. 

வியட்நாம் பிரதமர் நகுயென் டான் டுங், அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் ஏற்பாடாகியுள்ளது.

மறைந்த வியாட்நாம் ஜனாதிபதி ஹோ ஷி மின் உடைய நினைவாலயத்தையும் அமைச்சர் சென்று பார்வையிடவுள்ளார்.

வியட்நாம் தேசிய மன்றத்தில் (பாராளுமன்றம்) அமைச்சர் ஹக்கீமை அதன் பிரதித் தலைவர் உவோங் சூ லூரு வரவேற்பார்.

வியட்நாம் வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் இலங்கையின் நீதியமைச்சருக்கு வரவேற்பொன்றை அளிக்கவுள்ளனர்.

இலங்கையில் உள்ள வியட்நாம் தூதரகமும், வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுரகமும் அமைச்சரது விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. அமைச்சர் ஹக்கீமுடன் நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் குமார் ஏகநாயக்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் அங்கு செல்கின்றனர்.

அமைச்சின் ஊடகப்பிரிவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :