முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த தலைவரைக் காட்டியவர்கள் வடபுல மக்கள்-ரிஷாத்















எஸ்.எச்.எம்.வாஜித்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட மிக முக்கிய பிரச்சினைகளில் முதலாவது வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஆகும்.

ஒரு தேசத்தில் தமக்கென ஒரு தாயக பிரதேசத்தை கேட்டுப் போராடி வந்த ஒரு இயக்கம்இதனது இனத்தின் உரிமைக்காக போராடிய இயக்கம் தன்னை விட சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேற்றி அந்த மக்களின் உரிமையை பறித்துத் தொடுத்த கோர நிகழ்வாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் நிரந்தரமான ஒரு கறைபடிந்த வரலாற்றை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருந்தது.

காலாகாலமாக அந்நியோன்யமாக வாழ்ந்த தமிழ்இ முஸ்லிம் மக்களின் சொத்துக்களைச் சூறையாடி அகதிகளாக்கி விட்டு இன்றுவரை முஸ்லிம்களின் வடபகுதி சொத்துக்களை அனுபவித்து அவர்களின் வீடுகளில் வாழ்ந்தும்இபள்ளிவாசல்களை பாழ் படுத்தியும் வந்த ஒரு கூட்டத்திடமிருந்து முஸ்லிம் சமூகம் என்று விடுதலை பெறும்இ எப்போது நமது மண்ணில் காலடி எடுத்து வைப்போம் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் எமது உடன் பிறப்புக்களின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது தனது பலத்தின் மூலம் பல தடவை ஆட்சியை தீர்மானித்த போதிலும் இது பற்றி எதுவித நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்ட்து என்பது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு சோகமானதும்இ குறிப்பாக வட பகுதி மக்களை பொறுத்தவரை கறை படிந்த வரலாறுமாகும்.

அகதிகளின் பெயரால் அமைச்சுப் பதவிகளைப் பெற்றதும்இ அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டியதையும் தவிர மு.கா.எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கை களையும் மேற்கொள்ளாத நிலையில் அல்லாஹ்வின் ஏற்பாடாக அந்த அகதிச் சமூகத்திலிருந்து ஒரு தலைவனை அல்லாஹ் உலகுக்கு வெளிக்காட்டியுள்ளான்.

உண்மையான ஒரு அகதியின் உணர்வும்இ பயங்கரவாதத்தின் கொடூரத்தை நேரடியாகச் சந்தித்துஇஉறவுகளை இழந்து உரிமை இழந்து தாயகத்தை விட்டு வெளியேறிய இந்த உறவுகளை அவர்களது  சொந்த மண்ணுக்கு எப்படியாவது கொண்டு சென்று குடியேற்றுவதே தனது முதல் வேலையெனத் துடிக்கும் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் வெற்றி வட பகுதி மக்களின் வாழ்வில் நிச்சயம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என நம்பலாம்.

அதே நேரம் நான் பாராளுமன்ற உறுப்பினராக ஆனது முதல் இன்று வரை தனது சமூகமே எனது உயிர் மூச்சென வாழ்ந்து வரும் உண்மையான ஒரு தலைவரை ஈன்ற வடபகுதி மக்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காலத்துக்கு காலம் பல தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தை வழி நடத்தி வந்தனர்.இறுதியாக கிழக்கு மண்ணிலிருந்து மு.கா.வின் ஸ்தாபகத்தலைவர் வந்தார் அவருக்கு கிழக்கு மக்கள் அதிகம் ஆதரவை வழங்கியதன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு சிறந்த தலைவரை அடையாளம் காட்டினர்.

இன்று அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பிரவேசத்தின் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த தலைவரைக் காட்டிய பெருமை எமது வட புல மக்களுக்கு கிடைத்துள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவராக வந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்
தலைவராக வந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின்
கொள்கையும்இஉண்மையான போராளிகளும் நாடளாவிய ரீதியில் இவரின் பின்னர் இணைந்து கொண்டது ஒரு கட்சியின் அரசியல் வரலாற்றில் மிகக்குறுகிய காலத்தில் இடபெற்றொதொரு நிகழ்வாகும்.அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கின்றது.

தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் புகைப்படத்தையும் பெயரையும் மட்டும் எடுத்துக்கொண்டுஇகொள்கையை வீதியில் போட்டு விட்டது.அது இன்று றிஷாட் பதியுதீனின் கைகளில் கிடைத்தபோது மு.கா.வின் ஆதரவு முற்றிலும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.

தற்போது இக்கட்சியானது அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கிய நகரங்களான கல்முனைஇசம்மாந்துறைஇ போன்ற இடங்களில் மிக வேகமாக பரவி வருவதன் காரணம் அதன் தலைவர் மீது இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அம்பாறை மாவட்டத்திலும் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் முஸ்லிம் தலைவர்கள் சென்று மார்தட்டி அரசியல் செய்பவர்கள் இன்னும் அஷ்ரப் அவர்களால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புக்களையும் அவரால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட காரணங்களையுமே இன்றும் கூறி தமது அரசியல் வியாபாரத்தை நடாத்தி வருவதன் விளைவு அவர்களுக்கு இந்த பொதுத் தேர்தலில் இவர்களுக்கு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.


அது போலவே! ஒரு பாராளுமன்ற உறுப்பினரானதன் பின்னர் தொடங்கி இன்றுவரை எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும்  செய்யாத அளவு அபிவிருத்தியை  இந்நாட்டின் முஸ்லிம் இதமிழ்இசிங்கள சமூகங்களுக்கு   பாரபட்சமின்றி பெருமை மிக்க தலைவராக நாம் அவரைக் காணமுடியும்.

கிழக்கில் பல அமைச்சர்கள் தமது ஊருக்கு மட்டுமே அமைச்சராக இருந்தனர்.இன்னும் சிலர் ஜனாதிபதி அமைச்சர் பதவி தந்தார்.அதனோடு அதிகாரத்தையும் சேர்த்துத்தரவில்லை என சாட்டுச்சொல்லி காலம் கடத்திய வரலாறுகள் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின்

அந்த வகையில் இன்று ஒரு தலைவனை முஸ்லிம் சமூகத்துக்கு வடபகுதி மக்கள் தனது பெரும்பான்மை வாக்கின் மூலம் வழங்கவுள்ளனர் என்பதும்இ அவரின் பெருமை மிகு வெற்றி இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டுக்குள் வடபகுதி முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயக பூமிக்கு திரும்புவதற்கான ஒரு சமிங்ஞையாக இருக்கும் என்பதும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பும் பிரார்தனையும் ஆகும்.

சுமார் 4000 ஆதரவாளர்களை அம்பாறை மாவட்டத்தில் கொண்டிருக்கின்ற அ.இ.மு.கா. அதன் தலைவரின் வெற்றியுடன் 200000 ஆதராவளர்களை கொண்ட தேசிய மாநாடொன்றை கல்முனையில் நடத்த இளைஞர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :