புதிய மின்சாரக் கட்டணத்துக்கு அமைய 1 முதல் 30 வரையான மின் அலகுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ரூபா 50 சதம் மாத்திரமே உயர்த்தப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் டபிள்யூ. பீ. கணேகல தெரிவித்துள்ளார் .மின் பாவனையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் . 1 முதல் 30 வரையான அலகுகளைப் பயன்படுத்தும் 1.067 மில்லியன் பாவனையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை மாதமொன்றுக்கு 142 ரூபாவே அறவிடப்பட்டு வந்தது. புதிய திருத்தத்தின் படி 217 ரூபா அறவிடப்படவுள்ளது. இதற்கமைய நாளொன்றுக்கு 2 ரூபா 50 சதமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையான மின் அலகுகளைப் பயன்படுத்தும் மின் பாவனையாளர்கள் 1.25 மில்லியன் பேர் உள்ளனர். இவர்களுக்கான கட்டணம் நாளொன் றுக்கு 5 ரூபா 80 சதமே அதிகரிக்கப் பட்டுள்ளது.
அதேபோல 61 முதல் 90 வரையான மின் அலகுகளைப் பயன்படுத்தும் மின்பாவனையாளர்களின் கட்டணம் நாளொன்றுக்கு 14 ரூபா 50 சதத்தாலும், 91 முதல் 120 வரையான மின் அலகுகளைப் பயன்படுத்துபவர்களின் கட்டணம் நாளொன்றுக்கு 32 ரூபாவாலும், 121 முதல் 180 வரையான மின் அலகுகளைப் பயன்படுத்து பவர்களுக்கான கட்டணம் நாளொன்றுக்கு 50 ரூபாவாலும் அதிகரிக்கப்ப ட்டிருப்பதாகவும் மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டார். ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 23 ரூபா 30 சதம் செலவாகின்றபோதும், 15 ரூபா 65 சதத்துக்கே ஒரு அலகு மின்சாரம் பாவனையாளர்களுக்கு வழங்கப் படுகிறது.
பாவனையாளர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக அரசாங்கம் 10,500 பில்லியன் ரூபாவை மானியமாக வழங்குகின்றது.
ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவீனம் அதிகரித்ததன் காரணமாகவே மின் அலகுக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாவனையாளர்களால் செலுத்தக்கூடியளவிலேயே மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம், மின்சார சபையில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்த அவர், மின்சார சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் திறமையான முறையில் முன்னெடுக்கப் படுவதாகவும் கூறியுள்ளார்.LM
0 comments :
Post a Comment