அமெரிக்கா சென்றிருக்கும் பொதுபல சேனா உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் பெளத்த விகாரையில் தங்கியிருப்பதில் அதிருப்தியடைந்திருக்கும் விஹாரை நிர்வாகம் தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் குறிப்பிட்ட விஹாரையில் அவர்களுக்கு தங்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும், குறிப்பிட்ட தேரர் ஒருவரே இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்றும், விஹாரையில் பொதுபல சேனா உறுப்பினர்கள் தங்குவதை நிர்வாகம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களை உடனடியாக வெளியேற்றும்படியும், அவர்களை வைத்து பூஜைகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் அறிவித்துள்ளதாக பொதுபல சேனாவுக்கு எதிரான பெளத்தர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.JM
0 comments :
Post a Comment