என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர் -காத்தான் குடி நகரசபை உறுப்பினர்

திங்கட்கிழமையன்று ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பொருளியல் பாட ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் தெரிவித்தார்.

சகோதர இணையத்துக்கு

தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அல்லாஹ்மீது ஆணையாக நான் குறித்த மாணவியை எந்த தவறான எண்ணத்துடன் எனது காரில் அழைத்துச் செல்லவில்லை எதற்காக நான் அழைத்துச் சென்றேன் என்பதை விரைவில் ஊடகங்களின் மூலம் பகிரங்க அறிக்கையாக வெளியிடவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

அல்லாஹ்மீது ஆணையாக நான் அம் மாணவியுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அழிவுச்சத்தியம் செய்யவுள்ளேன் எனவும் பாக்கீர் ஆசிரியர் தெரிவித்தார்.

என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர் எனவும் நான் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பல ஆண்டுகாலமாக கல்வி கற்றுக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு மாணவியாவது என்னை மோசம் என்று இதுவரை சொல்லியுள்ளனரா என்றும் நான் கேட்க விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான பூரணமான அறிக்கையை விரைவில் வெளியிடுவேன் எனவும் பாக்கீர் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டார்.KI

குறிப்பிட்ட முதல் செய்திக்கு இதனைக் கிளிக் செய்யவும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :