(எம்.பைஷல் இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை சமூர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் 'திவிநெகுமவுக்கு சமுர்த்தியின் சக்தி' எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (21) புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்த விளையாட்டு நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களின் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி சின்னப் பாலமுனை அல் - ஹிக்மா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜெயரூபன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.கே.தஸ்லீம், அட்டாளைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எம்.ஹமிட், பாலமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.நழீம், வலய உதவி முகாமையாளர் ஏ.ஜே.எம்.அனீஸ், உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.றிஸ்வான் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும், பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதில் பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், போத்தலில் நீர் நிறப்புதல், சங்கிலிக் கதிரை, கிறிகெட் சுற்றுப்போட்டி மற்றும் பல விளையாட்டு நிகழ்வுகளின் இறுதித்போட்டிகள் இன்றைய தினம் இடம்பெற்று. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நடைபெற்ற சிறுவர்களுக்கான கிறிகெட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற சிறுவர் கழக அணியின் தலைவரிடம் ஒரு தொகுதி கிறிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். மேலும் ஏனைய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.கே.தஸ்லீம், மகா சங்க முகாமையாளர் நயிமா அத்தீக், அட்டாளைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எம்.ஹமிட், பாலமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.நழீம், வலய உதவி முகாமையாளர் ஏ.ஜே.எம்.அனீஸ், உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.றிஸ்வான் ஆகியோர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கிலிக் கதிரைபோட்டியில் வெற்றிபெற்ற சமுர்த்தி உத்தியோத்தர் முஹம்மட் அப்துல்லாவுக்கான பரிசிலை ஊடகவியலாளரும், சமுர்த்தி உத்தியோகத்தருமான ரீ.கே.றஹ்மத்துல்லாவினால் வழங்கி வைக்கப்பட்டது.








0 comments :
Post a Comment