மாகாண விளையாட்டு அமைச்சினால் பல்தொகுதி கட்டடங்கள்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

விளையாட்டுத் துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 9 மாகாணங்களிலும் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாகாண விளையாட்டு பல்தொகுதி கட்டடங்களை துரிதமாக நிர்மாணிக்கும்படி சம்பந்தப்பட்ட நிர்மாண சபைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் சிபார்சின் பேரில் 9 மாகாணங்களிலும் 4500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாண விளையாட்டு பல்தொகுதி கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்திருந்தார்.

வட மாகாணத்தில் - கிளிநொச்சி, ஊவா மாகாணத்தில் - பதுளை, வடமத்திய மாகாணத்தில் - அனுராதபுரம், மத்திய மாகாணத்தில் - திகன, கிழக்கு மாகாணத்தில் - மட்டக்களப்பு, மேல் மாகாணத்தில் - களுத்துறை, தென் மாகாணத்தில் -  மாத்தறை ஆகிய இடங்களில் மாகாண விளையாட்டு பல்துறை பயிற்சிக் கூடம் நிர்மாணிக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :