கல்முனை மாநகர சபை முதல்வர் பதவி பகிரப்படுமா? - பதிலளிக்கிறார் முதல்வர் சிராஸ் -

கல்முனை  மாநகர சபையின் முதல்வர் பதவி -  நீண்ட இழுபறிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் - தற்போதைய முதல்வர் சிராஸ் மீராசாஹிப்புக்கு வழங்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.

ஆனாலும், கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவியினை சிராஸ் மீராசாஹிப் மற்றும் தற்போதைய பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோரிடையே பகிர்ந்தளிப்பது எனும் உடன்பாடொன்று மு.காங்கிரசினால் எட்டப்பட்டிருந்தது.

அந்தவகையில், கல்முனை மாநகர சபையின் முதல்வருக்கான பதவிக் காலத்தின் முதல் அரைவாசிப் பகுதியில் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியினை வகிப்பார் எனவும், அடுத்த அரைவாசிப் பகுதியில் நிஸாம் காரியப்பர் முதல்வராக பதவி வகிப்பார் எனவும் கூறப்பட்டது.

இதனடிப்படையில், சிராஸ் மீராசாஹிப் - கல்முனை மாநகர சபையின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், தற்போதைய முதல்வர் சிராஸ் - தனது பதவியினை ராஜிநாமா செய்தால் மட்டுமே - அந்த வெற்றிடத்துக்கு நிஸாம் காரியப்பரை முதல்வராக நியமிக்க முடியும்.

இதேவேளை, கல்முனை மாநகர சபை முதல்வர் பதவிக்கான முதல் அரைவாசிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவுக்கு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக, தற்போதைய முதல்வர் தனது பதவியினை ராஜிநாமா செய்வாரா என்பது, உள்ளுர் அரசியல் வட்டாரத்தில் சூடான கேள்வியாக உள்ளது.

இந்தக் கேள்வி உட்பட இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு  - எமது  'இம்போட் மிரர்' இணைய வானொலியின் 'அரசியல் களம்' நிகழ்சியில்  இன்றிரவு (28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) 9.00 மணிக்கு கலந்து கொண்டு
கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் பதிலளிக்கின்றார்.

கேட்கத் தவறாதீர்கள்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :