2012 இல் இலங்கைக்கு 2.75மில்லியன் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

2012 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இக்காலப்பகுதியில் இலங்கையில்  0.57 மில்லியன் கையடக்க தொலைபேசிகளே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சைபர் மீடியா ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனை நிறுவனமான பிரிமியர் ஐவு எனும் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்த மட்டில்  இந்த காலப்பகுதியில் நொகியா (Nokia) கையடக்க தொலைபேசிகள் அதிகளவு விற்பனையாகியுள்ளது. கையடக்க தொலைபேசிகள்  சந்தையில் 31.9மூ சந்தை வாய்ப்பை தன்னகத்தே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்சுங்
கையடக்க தொலைபேசிகள் 17.4மூ உடன் இரண்டாமிடத்திலும், மைக்குரோமெகஸ் கையடக்க தொலைபேசிகள் 10.4மூ உடன் மூன்றாமிடத்திலும் காணப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டில் சுமார் 22 கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இலங்கைக்கு கையடக்க தொலைபேசிகளை ஏற்றுமதி செய்திருந்ததாகவும், ஸ்மார்ட் போன்களின் பாவனை மற்றும், அண்ட்ரொயிட் தொழில் நுட்பத்தில் அமைந்த கையடக்க தொலைபேசிகளின் பாவனை அதிகரித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :