ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சமாதானத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம்.























சமாதானத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிரான உத்தேச சட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன, மத மற்றும் குல பேதங்களை தூண்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார புதிய உத்தேச சட்டமொன்றை தயாரித்துள்ளார்.

இந்த சட்டமே அண்மையில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிடுவார் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்ளடக்கங்களை கருத்திற் கொண்டு சட்டத்தை அனுமதிப்பது குறித்து அறிவிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தூண்டும் வகையில் எழுத்து மூலமோ அல்லது வாய் மொழி மூலமோ கருத்து வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழிகோலும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :