இஸ்லாத்தில் இது ஒன்றும் இல்ல -கொடியேற்றம் கல்முனை















மதியன்பன்

ல்முனை கடற்கரைப் பள்ளி – அதன்
கன்றாவித் தனங்களைச் சொல்லி
கவிதைகள் பாடுவேன் புள்ள – நீயும்
காதினை நீட்டுவாய் மெல்ல..

கடற்கரை ஓரத்தில் கபுறு – அதைக்
காப்பாத்த சுற்றித்தான் சுவரு..
கண்னெட்டா தூரத்தில் மினரா – அதில்
கட்டுவார் கொடிகளை திமிறா..

பாவாக்கள் என்றொரு கூட்டம் – அங்கே
பக்தியில் போடுகிறார் ஆட்டம்
பச்சையால் போர்த்திய ஆடை – அவர்
பாடினால் கஞ்சாவின் வாடை..

திருவிழா போலத்தான் காட்சி – இங்கு
திருநீறு சொல்லுதே சாட்சி..
திருமறை கதீதுகள் இல்ல – பல
திருமணம் நடக்குது உள்ளே..

பெட்டையும் பெடியனும் யாரு – அங்கு
போடுறார் கும்மாளம் பாரு..
பெற்றவர் கூட்டித்தான் கொடுக்கார் – இதை
பெருமையாய் எண்ணியே தடுக்கார்..

‘பைஅத்’ என்றுதான் சொல்லி – அங்கு
பாவாக்கள் பெண்களைக் கிள்ளி..
பக்தியாய் தடவுகிறார் மேனி – பலர்
பணிவுடன் நிற்கிறார் கூணி

கபுறடியில் நடக்கின்ற கூத்து – பெரு
காமடி சொன்னாலே பார்த்து
கையேந்தி நிற்கிறார் கபுறில் – அவர்
காலமெல்லாம் வாழ்கிறார் குப்றில்

இஸ்லாத்தில் இது ஒன்றும் இல்ல – இந்த
இடத்துக்கு போகாத புள்ள..
இறைவனை மட்டுமே வணங்கு – நம்
இறைதூதர் சொல்லுக்கு இணங்கு

(கவிதைக்கு பொறுப்பு கவிதை யாக்கியவரே)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :