கல்முனையில் திறக்க இருக்கும் பொதுபல சேனா காரியாலயம் - டிலந்த


பொதுபல சேனா அமைப்பு கல்முனையில் காரியாலயம் ஒன்றை அமைக்க உள்ளதாக அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே  சகோதர இணையத்துக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், அவர்கள் நாடு திரும்பியதும் கல்முனையில் காரியாலயம் அமைப்பது தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்முனை யிலிருந்து நேற்றைய தினம் பொது பல சேன அலுவலகத்திற்கு வருகை தந்த சிலர் கேரிக்கை விடுத்ததை அடுத்தே அங்கு அலுவலகம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுபலசேனா அமைப்பிற்கு எதிராக அண்மையில் கல்முனை மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :