சவூதியில் தாக்குதலுக்குள்ளான பெண் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதி.


 சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகர் வீடொன்றுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற அக்கரைப்பற்று வேலாமரத்து வெளியைச் சேர்ந்த ஹுஸைன் சித்தி சபிலா வயது 22 என்ற யுவதி வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்டு, உடலில் காயங்களுடன் நாடு திரும்பி, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைசபெற்று வருகின்றார்.

கடந்த 10 மாதங்களாக வீட்டுக்குப் பணமோ, தன்னைப் பற்றிய தகவல்களோ அனுப்படாத நிலையில், பெற்றோர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக 10 மாதங்களின் பின் எஜமானியின் நடவடிக்கைகள் பற்றி தான் அறிந்து கொண்டதாகவும், வீட்டுக்கு எனது சம்பளத்தை அனுப்பாமல் ஏமாற்றி உள் ளார்கள் என்பதை அறிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனக்குரிய சம்பளத்தை வழங்குமாறு எஜமானியிடம் கேட்ட போது தன்னைக் கடுமையாக துன்புறுத்தி உடலில் காயங்களையும் ஏற்படுத்தியதாகவும் சித்தி சபிலா தெரிவித்தார்.

பெற்றோர் எடுத்துக் கொண்ட முயற்சியினாலேயே நாடு திரும்பியதாகவும் தன்னை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சப் ஏஜென்ஸி சவூதிக்கு அனுப்பியதாகவும் சபிலா தெரிவித்தார்.-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :